கொடிய டெங்கை கட்டுப்படுத்த சூழலை சுத்தமாக வைத்திருப்போம், மீறினால் சட்ட நடவடிக்கை - டாக்டர் காதர்

(றிஸ்வான் சாலிஹு)

நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு நிகழ்வு சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொடிய உயிர் கொல்லியான டெங்கை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதர்கள், சுகாதார பணியாளர்கள், களப்பணியாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, டெங்கு நோயாளிகள் அக்கரைபற்றில் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து, இழப்புக்களை தவிர்க்குமுகமாக வீடு வீடாக சோதனையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடம்பிகள், நுளம்பு பரவ ஏதுவான பாத்திரங்கள் உங்கள் வீடுகள் மற்றும் வளவுகளில் காணப்படுமிடத்து சட்ட நடவடிக்கையினை எடுக்க தீர்மானிக்க பட்டுள்ளதோடு, உங்கள் வீடுகள் வளவுகளிலுள்ள நீர் தேங்கி நுளம்பு உருவாக்கக்கூடிய பொருட்களை உரிய முறையில் அகற்றி விடுமாறும், கிணறுகளில் மீன்கள் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அதை வலை போட்டு மூடி வைக்குமாறும் அவர் பொது மக்களை வேண்டிக் கொண்டுள்ளார்.

எனவே, உங்கள் சூழலை நீங்களே துப்பரவு செய்து டெங்கு பரவக்கூடிய இடங்களை அழித்து, உங்கள் பகுதிகளுக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் டாக்டர் காதர் கேட்டுக் கொண்டுள்ளார்.




கொடிய டெங்கை கட்டுப்படுத்த சூழலை சுத்தமாக வைத்திருப்போம், மீறினால் சட்ட நடவடிக்கை - டாக்டர் காதர் கொடிய டெங்கை கட்டுப்படுத்த சூழலை சுத்தமாக வைத்திருப்போம், மீறினால் சட்ட நடவடிக்கை - டாக்டர் காதர் Reviewed by Editor on November 11, 2021 Rating: 5