அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி எஸ். மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை அனைத்து தர உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (10) புதன்கிழமை ஆரம்பமானது.

சுகாதார மற்றும் தொற்று தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர். எம்.ஏ.எம்.முபாரிஸின் ஒருங்கிணைப்பில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் டாக்டர் அஸாத் .எம்.ஹனிபாவின் மேற்பார்வையில், ஆரம்ப அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.ஐ.ஏ. நஸீர் அவர்களின் பங்குபற்றுதலுடன், ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட ஊழியர்களுக்கே  மூன்றாவது  பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,  தாதியர்கள் மற்றும் சுகாதார  ஊழியர்களுக்கு எதிர்வரும் 14 திகதி வரை பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம் Reviewed by Admin Ceylon East on November 11, 2021 Rating: 5