அக்கரைப்பற்று கிரிக்கெட் அணி தேசிய போட்டிக்குத் தெரிவு

(றிஸ்வான் சாலிஹு)

இளைஞர் விவகார விளையாட்டுத் துறை  அமைச்சினால் 33வது தேசிய விழாவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் கழகங்களின் அணி முதலாமிடம் பெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமிலுல் இலாஹி தெரிவித்துள்ளார்.

இப்போட்டி, இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரிப்பத்தாஞ்சேனை பொது மைதானத்தில் இடம்பெற்றதுடன், இதில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் கழகங்களின் அணியும், அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் கழகங்களின் அணியும் தெரிவாகி மோதின.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று அணி 05 பந்து வீச்சு ஓவர் முடிவில் 02 விக்கட்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை அணி 05 ஓவர் முடிவில் 05 விக்கட் இழப்புக்கு 57 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இதனடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி 07 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடி, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விளையாட்டு விழா  கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ளது என்று இளைஞர் சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.



அக்கரைப்பற்று கிரிக்கெட் அணி தேசிய போட்டிக்குத் தெரிவு அக்கரைப்பற்று கிரிக்கெட் அணி தேசிய போட்டிக்குத் தெரிவு Reviewed by Editor on November 11, 2021 Rating: 5