சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கி வைப்பு

நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் "சௌபாக்கிய வாழ்வாதார உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டம்" எனும் கருப்பொருளின் கீழ் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக சுயதொழில்களை வலுவூட்டி  அவர்களின் சுயதொழில் முயற்சிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உருவான "சௌபாகிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இறக்கமாம் -02 ஆம் கிராம சேவகர் பிரிவானது ஆடுகள் வளர்ப்பதற்கான உற்பத்திக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.   

சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் கட்டமாக 09 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வானது  உதவி பிரதேச செயலாளர் எம்.சி.எம் அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் நேற்று (11) வியாழக் கிழமை மதீனாபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல்  பணிப்பாளர் ஜனாப் கே.எல்.எம்.ஹம்சார், சிரேஷட அபிவிருத்தி யூ.எல்.எம். ஆகிர் உட்பட பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோத்தர், மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.






சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கி வைப்பு சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கி வைப்பு Reviewed by Editor on November 12, 2021 Rating: 5