அக்கரைப்பற்று அல்-முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மற்றுமொரு சாதனை

(றிஸ்வான் சாலிஹு)

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் சகல பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளை பெற்ற மாணவர்களின் தரப்படுத்தலில், முதன்மை பெற்ற மாணவர்ளை கௌரவிக்கும் விழாவில், அக்கரைப்பற்று அல்- முனவ்வறா  பாடசாலையை சேர்ந்த முஹம்மத் சித்தீக் முஹம்மத் அஜ்வத் என்ற மாணவன் சகல பாடங்களிலும் அதிவிஷேட சித்தியை பெற்றுக்கொண்டமைக்காக கௌரவிக்கப்படவுள்ளார் என்று கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.

இக்கௌரவிப்பு விழா எதிர்வரும் திங்கள்கிழமை (22) காலை 10.00 மணிக்கு பத்ரமுல்லையில் உள்ள கல்வியமைச்சில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அக்கரைப்பற்று கல்வி வலயம் சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவர் இவராவார் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இம்மாணவனுக்கு தரம் 1 முதல் 11 வரை கல்வியூட்டிய சகல ஆசிரியர்களுக்கும், ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும், இவ்வரலாற்று வெற்றிக்காக பங்களிப்பு செய்த அக்கரைப்பற்று முன்னாள் வலய கல்வி பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசீம் , தற்போதைய வலய கல்விப்பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ், கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலிலுர்ரஹ்மான், EPSI இணைப்பாளர் எம்.எல்.எம். லாபீர், முன்னாள் அதிபர்கள், பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் பாடசாலை சார்பாக அதிபர் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



அக்கரைப்பற்று அல்-முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மற்றுமொரு சாதனை அக்கரைப்பற்று அல்-முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மற்றுமொரு சாதனை Reviewed by Editor on November 18, 2021 Rating: 5