பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சபீஸினால், தேசிய விருதை பெற்ற அப்துல் ஹமீட் கெளரவிக்கப்பட்டார்

(றிஸ்வான் சாலிஹு)

சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 10ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்ற அரச புகைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில், அக்கரைப்பற்றில் இருந்து கலந்து கொண்டு தேசிய புகைப்படக் கலைஞருக்கான விருதை பெற்ற ரீ. அப்துல் ஹமீட் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் சிறப்பு நிகழ்வு அக்கரைப்பற்றில் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ்.எம்.சபீஸ் அவர்களின் பூரண அனுசரனையுடன், அக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் ஆலோசகர் சிரேஷ்ட நில அளவையாளர் ஏ.எல்.முகைதீன் பாவா அவர்களின் தலைமையில் "AIMS சர்வதேச பாடசாலையின் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

அப்துல் ஹமீட் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த உயரிய விருதானது, இத்துறையில் கிழக்கு மாகாணத்தில் பெறப்பட்ட முதலாவது அரச விருது என்பதோடு, இம்மண்ணுக்கு அவரால் சேர்த்து தந்த இந்த சாதனையை, மாநகர சபை உறுப்பினர் சபீஸ் அவர்களினால் பாராட்டி, பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.சபீஸ், டாக்டர் ஆகில் அஹமட் சரிபுதீன், சிரேஷ்ட நில அளவையாளர் முகைதீன் பாவா, ஆசிரியர் ஹில்மி ஹூசைன் ஆகியோர்கள், விருது பெற்ற ஹமீட் அவர்களின் சாதனையை புகழ்ந்து உரையாற்றியதோடு, சட்டத்தரணி டாக்டர் கே.எல்.சமீம், ஓய்வு பெற்ற அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள், இலக்கியவாதிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


















பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சபீஸினால், தேசிய விருதை பெற்ற அப்துல் ஹமீட் கெளரவிக்கப்பட்டார் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சபீஸினால், தேசிய விருதை பெற்ற அப்துல் ஹமீட் கெளரவிக்கப்பட்டார் Reviewed by Editor on November 28, 2021 Rating: 5