ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நுண்ணோக்கி (Microscope) அன்பளிப்பு

(றிஸ்வான் சாலிஹு)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) நுண்ணோக்கி (microscope) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கல்முனை சுகாதாரப்பணிமனையின் சார்பாக டாக்டர் நபீல் அலியார் அவர்களினால், கல்லூரியின் அதிபர் திருமதி நஜீமா ஹருடீனிடம் வழங்கப்பட்டது.

இந்த நுண்நோக்கியை மாணவர்களின் நலன்கருதி வழங்க முழுமுயற்சியாய் இருந்த டாக்டர் நபீல் அவர்களுக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுனன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நுண்ணோக்கி (Microscope) அன்பளிப்பு ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நுண்ணோக்கி (Microscope) அன்பளிப்பு Reviewed by Editor on November 27, 2021 Rating: 5