புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு

"சுபீட்ச பாதைப் புரட்டு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக  பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுகள் இன்று (06) நாடுபூராகவும்  இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம் கொள்கை பிரகனடத்திற்கு அமைவாக ”100,000 கிலோமீற்றர் வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் வேலைகளை பூர்த்தி செய்த 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து மக்கள் உரிமையாக்குதல் செயற்பாடானது இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைவாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல வீதிகள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், தமிழ் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் சிபாரிசுக்கு இணங்க ரூபா 361 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், தமிழ் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் கலந்துகொண்டு குறித்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்துள்ளார்.

இதன்போது கட்சியின் அரசியில் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கிராம மக்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

(மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு)





புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு Reviewed by Editor on November 06, 2021 Rating: 5