ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்துக்கு அனுமதி

ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. 

தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் இன்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

அதேபோன்று, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்துக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சட்டமூலங்கள் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே ஆகும். 

இந்த சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, வடிவேல் சுரேஷ், அசோக்க பிரியந்த, வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்துக்கு அனுமதி ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்துக்கு அனுமதி Reviewed by Editor on November 09, 2021 Rating: 5