ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ஓர் இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.முஹம்மட் றிஸானின் நெறிப்படுத்தலில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 31பேருக்கு 'பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்' பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம் நழீல், அவர்களும் கலந்து கொண்டனர்.