இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த மாலைதீவு ஜனாதிபதி

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் அவர்கள் இன்று (09) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களை சந்தித்தார்.  

இச்சந்திப்பு இன்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் இப்ராஹிம் ஹூட், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துல் ரசாக் மற்றும் எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.






இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த மாலைதீவு ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த மாலைதீவு ஜனாதிபதி Reviewed by Editor on November 09, 2021 Rating: 5