கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் கண்டர் ரக வாகன சாரதியின் அசமந்த போக்கினால் பாரிய விபத்து ஒன்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பேருந்துக்காக வீதியோரத்தில் காத்திருந்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,ஒரு முச்சக்கரவண்டி மற்றும் ஒரு மகிழுந்து பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,இவ்விபத்து சாரதியின் அசமந்த போக்கினால் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதியின் அசமந்த போக்கால் பாரிய வீதி விபத்து
 
        Reviewed by Editor
        on 
        
November 21, 2021
 
        Rating: