நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர் நியமனம்

நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக காத்தான்குடி ஆயுர்வேத யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஐ. அத்தாரிக் செவ்வாய்க்கிழமை (16) கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

மருதமுனையைச் சேர்ந்த வைத்தியர் ஐ. அத்தாரிக் அவர்கள் பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி பலவருட சேவை அனுபவத்தைக் கொண்டவராவார்.

இதற்கு முன்னர் கடமையாற்றிய பணிப்பாளர் டாக்டர் கே.எல்.நக்பர் வேறொரு வைத்தியசாலைக்கு உடனடியாக இடமாற்றலாகி சென்றதன் விளைவாகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர் நியமனம் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர் நியமனம் Reviewed by Sifnas Hamy on November 17, 2021 Rating: 5