T20 உலகக்கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலிய அணி

நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை டுபாயில் இடம்பெற்ற 2021 T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 8விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு சந்தர்ப்பத்தை வழங்கியத்திற்கமைய, அவர்களுக்கு வழங்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 85 அதி கூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று  இக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டார்கள்.

T20 உலகக்கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியா அணி தனது முதலாவது வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




T20 உலகக்கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலிய அணி T20 உலகக்கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலிய அணி Reviewed by Editor on November 15, 2021 Rating: 5