இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73ஆவது வருடாந்த மாநாடு

இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (04) சனிக்கிழமை பிற்பகல் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.

கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சிரேஷ்ட கால்நடை மருத்துவர்களான எச்.பீ.பிரேமசிறி மற்றும் ஆர்.எம்.பீ.எச்.தசநாயக்க ஆகியோருக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் சிறப்பு பாராட்டு விருது மற்றும் நினைவு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73ஆவது மாநாட்டின் தலைவர் கால்நடை வைத்தியர் எரந்திகா குணவர்தன அவர்களினால் வருடாந்த மாநாட்டிற்கு வருகைத்தந்த கௌரவ பிரதமர் உள்ளிட்ட விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.

இதன்போது இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக கால்நடை வைத்தியர் சுசந்த மல்லவஆராச்சி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் உள்ளிட்ட இலங்கை கால்நடை வைத்திய சங்கத்தின் வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர் என்று பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.




இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73ஆவது வருடாந்த மாநாடு இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73ஆவது வருடாந்த மாநாடு Reviewed by Editor on December 05, 2021 Rating: 5