காத்தான்குடியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடியில் காத்தான்குடி நகர சபையினால் மேற் கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையினால் சுபீட்சத்தின் நோக்கில் கட்டியெழுப்பப்படுகின்ற திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகர சபையின் நிதியில் காத்தான்குடி வாவிக் கரையோரம் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் கொள்வலன் கடைத் தொகுதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி குட்வின் சந்தியில் நிர்மானிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி என்பன இதன் போது திறந்து வைக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அகமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட அமைச்சின் உயரதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர், நகர சபை செயலாளர், நகர சபை உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி வாவிக் கரையோரம் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் கொள்வலன் கடைத் தொகுதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி குட்வின் சந்தியில் நிர்மானிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி என்பன இதன் போது திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கைளிக்கப்பட்டதுடன் சிறுவர் பூங்கா வளாகத்தில் மர நடுகையும் இடம் பெற்றது.






காத்தான்குடியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு காத்தான்குடியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு Reviewed by Editor on December 05, 2021 Rating: 5