இலங்கையை வந்தடைந்த உலகை சுற்றி வந்த சாரா

இலகுரக விமானத்தில் தனியாக உலகை சுற்றிவரும், 19 வயதுடைய இளம் பெண் சாரா ரதபோர்ட் (Zarah Rutherford) செவ்வாய்க்கிழமை (28) இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் கின்னஸ் சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, தனது பயணத்தின் ஒரு அங்கமாக இந்தோனேஷியாவிலிருந்து இலங்கை வந்தார்.

அவர் தனது விமானத்தை 52 நாடுகளில் தரையிறக்க திட்டமிட்டுள்ளார்.

இவர், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெல்ஜியத்தின் ரஸல்ஸ் நகரில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி இன்னும் மூன்று மாதங்களில் அதனை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.



இலங்கையை வந்தடைந்த உலகை சுற்றி வந்த சாரா இலங்கையை வந்தடைந்த உலகை சுற்றி வந்த சாரா Reviewed by Editor on December 29, 2021 Rating: 5