(ஹம்தான் பாலமுனை)
பாலமுனை இளைஞர்கள் சபை மற்றும் பாலமுனை YMMA ஆகியன இணைந்து பாலமுனை அரச ஹோமியோபதி வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலி மற்றும் மரக்கன்றுகள் நேற்று (07) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலை நோயாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சக்கர நாற்காலியை பாலமுனை YMMA கிளையின் தலைவர் ஐ.சிறாஜ் அகமட் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக குறித்த அமைப்புக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பாலமுனை இளைஞர்கள் சபையின் தலைவர் ஏ.எல்.முஹம்மட் சீத் தலைமையில் நிர்வாகச் செயற்பாட்டாளர்களினால் அரச ஹோமியோபதி வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி பிரவீனா அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த சக்கர நாற்காலியினை பெற்றுக் கொள்ள உதவிய பாலமுனை YMMA கிளையின் தலைவர் ஐ.சிறாஜ் அகமட் அவர்களுக்கு பாலமுனை இளைஞர்கள் சபை அமைப்பு நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.