நீர்வழங்கல் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற நீர்வழங்கல் மீளாய்வு கூட்டம்

2025ஆம் ஆண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் தூரநோக்கு சிந்தனையோடு மாவட்ட ரீதியாக இடம்பெற்று வரும் நீர் வழங்கல் மீளாய்வு கூட்டம் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை (17) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நானயக்கார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்மீளாய்வு கூட்டத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் அம்மூன்று மாவட்டங்களில் நீர்வழங்கல் சபையின் நேர்த்தியான செயற்பணி சம்பந்தமாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தூரநோக்கு சிந்தனையில் செயற்படுத்தப்பட இருக்கின்ற சுகாதார மேம்பாட்டு திட்டம் தொடர்பாகவும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

அத்துடன் மாவட்ட ரீதியாக நீர் வழங்கல் வசதிகளை கிராமிய மட்டமளவில் கொண்டு செல்கின்ற போது ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ . குலசிங்க திலீபன், கௌரவ. ரிஷாட் பதியுதீன், கௌரவ. சார்ள்ஸ் நிர்மலநாதன் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மூன்று மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் (வடக்கு) பிரதி முகாமையாளர் உள்ளிட்ட கௌரவ அமைச்சரின் செயலாளர், அமைச்சு அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட திணைக்களம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




நீர்வழங்கல் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற நீர்வழங்கல் மீளாய்வு கூட்டம் நீர்வழங்கல் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற நீர்வழங்கல் மீளாய்வு கூட்டம் Reviewed by Editor on December 18, 2021 Rating: 5