அக்கரைப்பற்றில் இடம்பெற்ற "ஊரிலிருந்து தொடங்குவோம்" நிகழ்வில் விஜித ஹேரத் எம்.பி

(றிஸ்வான் சாலிஹு)

நம்பிக்கை தரும் தோழமைச் சக்தியான தேசிய மக்கள் சக்தியின் (NPP) 'கிராமத்திலிருந்து தொடங்குவோம்' வேலைத்திட்டம் இன்று (25) சனிக்கிழமை காலை அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் இருந்து ஆரம்பமானது.

வாழ்க்கையை வனப்புமிக்கதாக்க தீர்வுகள் முன்மொழிவுகளை எடுத்து கொண்டு இந்த செயற்திட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

முன்னாள் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, தோழர்களான அபூசஹீத், றமீஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிறாஜ் மஸ்ஹூர் ஆகியோர் சகிதம் கடைவீதியில் களமிறங்கி, மக்களோடு சேர்ந்து இப்போராட்டத்தில் பங்குபற்றினார்கள்.





அக்கரைப்பற்றில் இடம்பெற்ற "ஊரிலிருந்து தொடங்குவோம்" நிகழ்வில் விஜித ஹேரத் எம்.பி அக்கரைப்பற்றில் இடம்பெற்ற "ஊரிலிருந்து தொடங்குவோம்" நிகழ்வில் விஜித ஹேரத் எம்.பி Reviewed by Editor on December 25, 2021 Rating: 5