NO Name விளையாட்டு கழகம், ஹிஜ்ரா சூப்பர் லீக் T20 கோப்பையை கைப்பற்றியது

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகம் நடாத்திய "HIJRA SUPER LEAGUE - 2021" கடினபந்து சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (05)  ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று "ஹிஜ்ரா விளையாட்டு கழகமும், அக்கரைப்பற்று "நோ நேம்" விளையாட்டு கழகமும் மோதி நோ நேம் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நோ நேம் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20ஓவர்களை சந்தித்து 08விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி ஹிஜ்ரா அணியினர் 20 பந்து வீச்சு ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தார்கள்.

இப்போட்டியில் நோ நேம் அணி சார்பாக அணியின் சகலதுறை வீரர் சுஜா முஹம்மட் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தால்  31 ஓட்டங்களை பெற்றதோடு,  23 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அத்தோடு, இம்ராஸ்கான் 32ஓட்டங்களையும், சஜீர் 25 ஓட்டங்களையும் பெற்றார்கள்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக நோ நேம் அணியின் சகலதுறை வீரர் சுஜா முஹம்மட் தெரிவு செய்யப்பட்டதோடு, அணியின் சகல வீரர்களின் முயற்சியும் ஒத்துழைப்பு தான் 2021 ஆம் ஆண்டிற்கான ஹிஜ்ரா சூப்பர் லீக்கின் சம்பியனாக தெரிவு செய்வதற்கு காரணம் என்று அணியின் தலைவர் ஆசிரியர் பெளசான் தெரிவித்தார்.





NO Name விளையாட்டு கழகம், ஹிஜ்ரா சூப்பர் லீக் T20 கோப்பையை கைப்பற்றியது NO Name விளையாட்டு கழகம், ஹிஜ்ரா  சூப்பர் லீக் T20  கோப்பையை கைப்பற்றியது Reviewed by Editor on December 06, 2021 Rating: 5