பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று (03) முதல் 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மானித்திருக்கின்றது. 

இது தொடர்பில் கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த  அந்தச் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத், 

“அரசாங்கம் கடந்த வாரம் எரிபொருட் களின் விலை அதிகரித்திருந்தது. இதன் பிரகாரம் எமக்கு எரிபொருள் நிவார ணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் கேட் டிருந்தோம். ஆனால், இது தொடர்பாக அரசாங் கம் சார்பாக யாரும் இதுவரை எம்மை அழைத்துப் பேசவில்லை. 

பாடசாலைகள் விடுமுறை முடிந்து நாளை (இன்று) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. அதனால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்



பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு Reviewed by Editor on January 03, 2022 Rating: 5