கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக நியமனம்

கிழக்கு  மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் எம்.எம்.ஜவாத் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் தரத்தைச் சேர்ந்த இவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரின் 2021.12.31 திகதிய EP/3/1/B/PF/SLEAS/23 கடிதத்திற்க்கமைவாக 2022.01.01ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கல்வி தர நிர்ணயத்திற்கான மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளாராக செயற்பட்டு கிழக்கு மாகாணத்தின் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்கு தன்னாளான பங்களிப்பினை செய்து வந்தார்.

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் ஆசிரியருமாவார்.

இவர் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஊருக்கும்,நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அளப்பெரிய பங்காற்றியவராவார். இவர்கள் ஒரு மார்க்க அறிஞராக நீண்ட காலமாக சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டதோடு, ஜாமியா நளீமியா கலாபீடம், பேராதனை பல்கலைகழகம், களனி பல்கலைகழகம், இலங்கை திறந்த பல்கலைகழகம், மற்றும் தேசிய கல்வி நிருவகத்தில் (NIE) பல கற்கைநெறிகளிலும் தனது உயர்கல்வியினை இவர் கற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக நியமனம் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக நியமனம் Reviewed by Editor on January 03, 2022 Rating: 5