திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 26 பேரும் காயமடைந்துள்ளனர்.
இரண்டு வாகனங்களினது சாரதிகளும் காயமடைந்துள்ளதோடு, காயமடைந்த ஏனையவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூதூரில் பஸ் டிப்பர் கோர விபத்து – 26 பேர் வைத்தியசாலையில்
 
        Reviewed by Editor
        on 
        
January 10, 2022
 
        Rating: