மழை காலத்தில் வீதிப் பயணம் அவதானம்

(எம்.பஹ்த் ஜுனைட்)

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் மழை பொழிந்து வருகிறது இதனால் வீதிகளில் மழை நீர் தேங்கி காணப்படுவதுடன் பிரதான வீதிகள் ஈரலிப்பாகவே காணப்படுகிறது.

வீதிகள் ஈரலிப்பாக காணப்படுவதால் அவ் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களிலிருந்து சிந்திய பெட்ரோல், ஓயில் போன்றவை காரணமாக வீதிகள் அதிக வழுக்கும் தன்மை கொண்டு காணப்படும்.

இவ் வீதியால் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக  இரு சக்கர வாகனங்களை செலுத்துவோர் மிகவும் அவதானத்துடனும் வேக கட்டுப்பாடுடனும் பயணிப்பது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பாகும்.

பாதைக் கடவை கோடுகள் ஊடாக வீதிகளைக் கடக்கும் பாதசாரிகள் வாகனங்களின் வருகையை அவதானித்து நிதானமாக உரிய பாதுகாப்புடன் கடக்க வேண்டும்.

வாகன செலுத்துனர்கள் இக் கோடுகளில் பயணிக்கும் பாதசாரிகள் மீது மோதிவிடாத வகையில் வாகனத்தை நிறுத்தக்கூடியவாறு வேக கட்டுப்பாடுடன் வாகனத்தை செலுத்த வேண்டும்.

அதே நேரம் வீதியில் தேங்கியுள்ள மழை நீர் மற்றைய பயணிகள் மற்றும் பாதசாரிகள் மீது தெறித்துவிடாத வகையில் வாகனங்களை செலுத்த வேண்டும் மாறாக அடுத்தவர் மீது அழுக்கு நீரை தெறிக்க விடுவது மனிதாபிமானம் அற்ற செயல் பாதிக்கப்படுபவர்கள் உங்களுக்கு எதிராக பிரார்த்திக்கக் கூடும்.

பாடசாலை மற்றும் பகுதி நேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களை மிகவும் பாதுகாப்புடனும் அவதானத்துடனும் பயணிக்கச்செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையும், பொறுப்புமாகும்.

நிதானம், அவதானம்,மனிதாபிமானம், நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாக்கும்.




மழை காலத்தில் வீதிப் பயணம் அவதானம் மழை காலத்தில் வீதிப் பயணம் அவதானம் Reviewed by Editor on January 03, 2022 Rating: 5