அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதன்முறையாக அண்ணப் பிளவிற்கான சத்திரசிகிச்சை

(சியாத்.எம்.இஸ்மாயில்)

வரலாற்றில்  முதன்முறையாக அண்ணப் பிளவினை (Cleft Palate Surgery) சீர்செய்யும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிஜமை (04) நடாத்தி முடிக்கப்பட்டது . 

வாய் முகத் தாடை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் விராஜ் ஐயசிங்க மற்றும் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் எம்.என்.என்.எம்.சஹீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சத்திரசிகிச்சை கூட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் உதவியுடன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி வைத்திய நிபுணர்களுக்கும் சத்திரசிகிச்சை கூட குழுவினர்களுக்கும் நன்றி கூறுவதுடன், வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்று  நன்மையடையுமாறு கிழக்கு பிராந்திய கரையோர  மக்களை  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம் ஹனீபா கேட்டுக்கொண்டார்.

கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் காலம் தாழ்த்தி செய்யப்பட்ட இவ் சத்திர சிகிச்சைகள், இன்று எமது பிரதேசத்தில் அண்ணப் பிளவி குறைபாடினால் அவதியுரும் குழந்தைகளுக்கும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  





அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதன்முறையாக அண்ணப் பிளவிற்கான சத்திரசிகிச்சை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதன்முறையாக அண்ணப் பிளவிற்கான சத்திரசிகிச்சை Reviewed by Editor on January 05, 2022 Rating: 5