சுசிலை விலக்கியவர்கள் ஏன் லங்சாவை விலக்கவில்லை - முன்னாள் ஜனாதிபதி

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை சந்தையில் வைத்து அரசாங்கத்தை விமர்சித்ததற்காக அவரது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு அரசாங்கத்தை இதை விட இரண்டு மடங்கு விமர்சித்த அமைச்சர் நிமல் லங்சாவை அரசாங்கம் வெளியேற்ற வில்லை இது ஏன்? என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், 

சுசில் பிரேம் ஜயந்தவை வெளியேற்றுவதன் மூலம் அரசாங்கத்தில் ஏற்படும் வெடிப்புக்களை நிறுத்த முடியாது.

நாட்டில் தினமும் கேஸ் சிலிண்டர்கள் ஒலிக்கின்றன ஆனால் அதற்கு காரணமான குற்றவாளிகளை இனங்கான அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்த நாட்டு விவசாயிகள் இன்று அனுபவிக்கும்  துன்பங்களுக்கு  ஆளாகவில்லை அரசாங்கம் தனது குறைபாடுகளை உணர்ந்து நாட்டு மக்களின் துன்பம் வேதனைகளை துடைக்க தீர்வு காணாவிட்டால் விளைவுகள் மோசமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



சுசிலை விலக்கியவர்கள் ஏன் லங்சாவை விலக்கவில்லை - முன்னாள் ஜனாதிபதி சுசிலை விலக்கியவர்கள் ஏன் லங்சாவை விலக்கவில்லை - முன்னாள் ஜனாதிபதி Reviewed by Admin Ceylon East on January 04, 2022 Rating: 5