கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் தனுஷ்க குணதிலக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கை அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், தனது உடற்தகுதி நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் தான் இந்த முடிவை எடுத்ததாக தனுஷ்க குணதிலக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர்,தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜூன் மாதம் வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் தனுஷ்க குணதிலக்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் தனுஷ்க குணதிலக்க Reviewed by Editor on January 07, 2022 Rating: 5