மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் கடமைப் பொறுப்பேற்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் இன்று (07) வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்ததன், அடிப்படையிலே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் கடமைப் பொறுப்பேற்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் கடமைப் பொறுப்பேற்பு Reviewed by Editor on January 07, 2022 Rating: 5