அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முன்னாயத்த சான்றிதழ் கற்கைநெறி ஆரம்பித்து வைப்பு

(சியாத். எம். இஸ்மாயில், பட உதவி. கே.மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன் அனர்த்த முன்னாயத்த அவசரகால பதிலிறுப்பு தொடர்பான சான்றிதழ் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.அஸாத். எம்.ஹனிபா அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மது றியாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ்   திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் டாக்டர். ஆகில் ஷரீப்தீன் அவர்களின்  ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் அதிதிகளாகவும் வைத்தியசாலை மயக்க மருந்து நிபுணர் டாக்டர் எம்.என்.என்.எம் சஹீர்,  பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர். றிப்ஷான் ஜமீல், தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்தியர் டாக்டர்  எம்.எம்.தாஸிம் , தாதிய சகோதரி ஹினாயா,  ராணுவத்தின் உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் குழு உறுப்பினர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள்,  கற்கைநெறி பங்குபற்றுநர்கள்  உள்ளிட்ட பலர்  பங்குபற்றியிருந்தனர்.

இச்சான்றிதழ் பயிற்சிநெறியானது  200 மணித்தியாலயங்களை கொண்டதாகவும் அனர்த்த முன்னாயத்த விடயதான பரப்பு, பயிற்றப்பட்ட வளவாளர் குழு என்பவற்றை உள்ளடக்கி இப்பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முன்னாயத்த சான்றிதழ் கற்கைநெறி ஆரம்பித்து வைப்பு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முன்னாயத்த சான்றிதழ் கற்கைநெறி ஆரம்பித்து வைப்பு Reviewed by Editor on January 24, 2022 Rating: 5