சர்வதேச குத்து சண்டை போட்டியில் சாதனை படைத்த இந்துகாதேவி

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில்  கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரிப்பட்ட முறிப்பு புதிய நகரில் வாழ்ந்து வரும் இவ்யுவதி நேற்று (18) பாகிஸ்தான் லாஹுரில் இடம்பெற்ற இருபத்தைந்து வயதிற்குட்பட்ட 50-55 கி.கிராம் எடைப்பிரிவினரருக்கான போட்டியிலேயே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இந்நாட்டிற்கு புகழை தேடித்தந்ததுடன் எமது இளைய சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியை இந்த யுவதி காட்டித்தந்துள்ளார்.

இவர் மென்மேலும் சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென வாழ்த்துகின்றோம்.


சர்வதேச குத்து சண்டை போட்டியில் சாதனை படைத்த இந்துகாதேவி சர்வதேச குத்து சண்டை போட்டியில் சாதனை படைத்த இந்துகாதேவி Reviewed by Editor on January 19, 2022 Rating: 5