கொரியா பயணமான முன்னாள் ஜனாதிபதி

கொரியாவில் நடைபெறும் 2022ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (10) வியாழக்கிழமை காலை தென்கொரியா சென்றுள்ளார்.

கொரியாவில் அமைதியான நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகள் குறித்து உரையாற்றும் 157 நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களில் இவரும் ஒருவராவார்.

இந்தச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவர் பான் கீ மூன் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.



கொரியா பயணமான முன்னாள் ஜனாதிபதி கொரியா பயணமான முன்னாள் ஜனாதிபதி Reviewed by Editor on February 11, 2022 Rating: 5