அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருளை வழங்கத் தீர்மானம்

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தயாராகி வருகிறது.

மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டுத்தாபனத்தின் நாளாந்த இழப்பு ரூபா 365 கோடிக்கும் அதிகமாகும். எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்கு ஒரு ரூபாவைக் கூட கூட்டுத்தாபனத்தால் சேகரிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் இந்த மாதத்தில் ஏற்படும் நஷ்டம் அதிகரித்து, நிறுவனம் கடும் நிதிச் சரிவை சந்திக்க நேரிடும் என்றார்.

-Thinakural


அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருளை வழங்கத் தீர்மானம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருளை வழங்கத் தீர்மானம் Reviewed by Editor on February 16, 2022 Rating: 5