(சமூர்டீன் நௌபர்)
வவுனியா,மரக்காரம்பளை வீதியில் நேற்று (15) செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா, கணேசபுரம் பகுதியிலிருந்து மரக்காரம்பளை வீதியூடாக பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒழுங்கை ஒன்றிற்குள் திரும்ப முற்பட்டுள்ளது. இதன் போது எதிர்த்திசையில் வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள், பெண் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளின் சாரதியான பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரு மோட்டார் சைக்கிளின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து, ஸ்தலத்தில் இளைஞன் மரணம்
 
        Reviewed by Editor
        on 
        
February 16, 2022
 
        Rating: