சமூகத்தில் நற்பிரஜை உருவாக்கத்தில் பல்கலைகழக அர்ப்பணிப்பு பிரதான செயற்பாடாகும் - ஜனாதிபதி

(சமூர்டீன் நெளபர் - வன்னி)

தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (11) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வவுனியா பல்கலைக்கழக அங்குரார்ப்பன நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ,

சுபீட்சமான தூரநோக்கு கொள்கை பிரகடனத்தை நிறைவேற்றும் மற்றுமொரு செயற்றிட்ட வடிவம் எனவும் நாட்டின் நற்பிரஜை உருவாக்கத்தில்     பல்கலை கழக அர்ப்பணிப்பு பிரதான செயற்பாடாகும். சிறந்த கல்வியின் மூலம் நல்ல குடும்ப கட்டமைப்பு உருவாகும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்களின் ஒற்றுமை மிகவும் மெச்சத்தக்கது. நல்லிணக்க மற்றும் இணைந்து வாழும் சூழலை இங்கு தோற்றுவிக்கலாம் என நம்புகிறேன். Smart Learning centre மற்றும் Harmony unit இன்று ஆரம்பித்து வைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறதென குறிப்பிட்டார். மேலும் பல்கலைக்கழகம் அமைக்க பெரும் பங்காற்றிய பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும் என்று தெரிவித்தார்.

தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார். 

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 



சமூகத்தில் நற்பிரஜை உருவாக்கத்தில் பல்கலைகழக அர்ப்பணிப்பு பிரதான செயற்பாடாகும் - ஜனாதிபதி சமூகத்தில் நற்பிரஜை உருவாக்கத்தில் பல்கலைகழக அர்ப்பணிப்பு பிரதான செயற்பாடாகும் - ஜனாதிபதி Reviewed by Editor on February 11, 2022 Rating: 5