சீனி முஹம்மட் தல்ஹா, திடீர் மரண விசாரனை அதிகாரியாக நியமனம்

அக்கரைப்பற்று பிராந்திய திடீர் மரண விசாரனை அதிகாரியாக தல்ஹா சீனி முகமட் இன்று (03) வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி முண்ணிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மர்ஹும் முகையதீன் பாவா சினீ முகமட் மற்றும் மர்ஹும் மீரா சாஹிப் கதிஜாஉம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வாருமாவார்.

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் கலைப் பிரிவு பட்டதாரியான இவர், இந்தியாவின் சென்னை பல்கலைகழக முதுகலை பட்டதாரியும், உளவள துணையாளரும்,பிரபல சமுக சேவையாளருமாவார்.

கொவிட் நிலைமைகளை கருத்தில் கொண்டு வெற்றிடமாக இருந்த மரண விசாரணை அதிகாரி பதவி நிலை      கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான எ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கமைய கெளரவ  நீதி அமைச்சர் சட்டத்தரணி அலிசப்ரி அவர்களின் ஆலோசனைக்கமைவாக வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



சீனி முஹம்மட் தல்ஹா, திடீர் மரண விசாரனை அதிகாரியாக நியமனம் சீனி முஹம்மட் தல்ஹா, திடீர் மரண விசாரனை அதிகாரியாக நியமனம் Reviewed by Editor on February 03, 2022 Rating: 5