அட்டாளைச்சேனை லக்கி கழகத்தோடு மோதும் ஹீரோஸ் கழகம்

(றிஸ்வான் சாலிஹு)

திகாமடுல்ல உதைபந்தாட்ட அபிவிருத்தி லீக் ஏற்பாட்டில், "தவிசாளர் சம்பியன் கிண்ண" உதைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இச்சுற்றுப் போட்டித் தொடரின் இன்றைய நாள் (20) ஞாயிற்றுக்கிழமை போட்டியாக அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டு கழகமும், அட்டாளைச்சேனை ஹீரோஸ் விளையாட்டு கழகமும் மோதுகின்ற உதைப்பாந்தாட்ட போட்டி இன்று மாலை  4.30 மணிக்கு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றுத் தொடரில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரபல்யமான முக்கிய விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.



அட்டாளைச்சேனை லக்கி கழகத்தோடு மோதும் ஹீரோஸ் கழகம் அட்டாளைச்சேனை லக்கி கழகத்தோடு மோதும் ஹீரோஸ் கழகம் Reviewed by Editor on February 20, 2022 Rating: 5