ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நடுநிலையான ஊடக தர்மத்தை பின்பற்றுவது அவசியமாகும்

(ஊடகவியலாளர். எம்.பஹ்த் ஜுனைட்)

மக்களின் நம்பகத்தன்மையான பிரதிநிதிகளாக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடுநிலையான, நேர்மையான, பக்கச்சார்பு அற்ற சமூக உணர்வுள்ள மக்களின் சமூக சேவகர்களாக ஊடக தர்மத்தை பேணி பணியாற்றக் கூடியவர்களாக  இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இன மத பாகுபாடுகளை தாண்டி நடுநிலையாக  நேர்மையாக செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது கடமையாகும். தனது இனத்தை அல்லது தனது விருப்பமான அரசியல் வாதிகள்,அதிகாரிகளுக்கு பாக்கச்சார்பாக அல்லது அவர்களை  பாதுகாக்கும் வகையில் செய்திகளை எழுதுவதும்,பிரசுரிப்பதும் ஊடக தர்மத்தை அவமதிப்பதும் நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் நம்பிக்கை துரோகமாகும்.

எனவே ஊடகத்துறை சார்ந்தவர்கள் இறைவனுக்கு பயந்தவர்களாக மக்களின் நலன் மீது அக்கறை கொண்டவர்களாகவும் ஊடக தர்மத்தை பேணிநடக்கக்கூடியவர்களாகவும் தங்களது கடமையை முன்னெடுக்க வேண்டும். 

 பொறுப்பற்ற சில ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களால் ஊடக தர்மத்தை பின்பற்றி சமூக உணர்வோடு கடமையாற்றி வரும் பொறுப்புள்ள ஊடகவியலாளர்களும் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலை மாற வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.



ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நடுநிலையான ஊடக தர்மத்தை பின்பற்றுவது அவசியமாகும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நடுநிலையான ஊடக தர்மத்தை பின்பற்றுவது அவசியமாகும் Reviewed by Editor on February 04, 2022 Rating: 5