அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியிலிருந்து 15 மாணவர்கள் புலமை பரிசிலுக்குத் தகுதி

(றிஸ்வான் சாலிஹு)

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்-05 புலமைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட அக்/அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில்  15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று புலமைமைப் பரிசில் பெறுவதற்கான தகுதிகளை பெற்றுள்ளதாக அதிபர் எஸ்.றினோஸ்டீன் தெரிவித்துள்ளார்.

புலமைமைப் பரிசில் பெற தகுதியுடைய மாணவர்களின் எம்.ரீ.அஸ்தாக் ஹபீ என்ற மாணவன் 182 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட கொவிட்19 அசாதாரண சூழ்நிலையிலும் பாடசாலை மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இம்மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக கல்வி கற்று இந்த புள்ளிகளை பெற்றிருப்பது பாராட்டக்கூடிய விடயம் என்பதுடன், இவ்மாணவர்கள் சிறந்த முறையில் புள்ளிகளை பெற உதவி செய்த கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியிலிருந்து 15 மாணவர்கள் புலமை பரிசிலுக்குத் தகுதி அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியிலிருந்து 15 மாணவர்கள் புலமை பரிசிலுக்குத் தகுதி Reviewed by Editor on March 15, 2022 Rating: 5