இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 55 வருடங்களின் பின்னர் நேற்று (27) தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
முதலாவது விமானம் இன்று காலை 8.40 மணிக்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது. மாலைதீவின் தேசிய விமான சேவையான MaldivianAero விமானம் வருகை தந்து அதற்கு தண்ணீர் தெளித்து வரவேற்கப்பட்டது.
இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விமானம் 50 இருக்கைகள் கொண்ட Dash-8 விமானமாக பயன்படுத்தப்படுவதோடு, இது வாரத்திற்கு மூன்று முறை திட்டமிடப்பட்ட விமானங்களை சேவையில் உள்ளடக்கியதோடு, எதிர்வரும் மே மாதம் முதல் அது ஐந்து விமானங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, மாலைதீவுக் குடியரசின் தூதுவர் உமர் அப்துல் ரசாக், மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எம்.ஜே. சாதிக், விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
March 28, 2022
Rating:





