வரலாற்று சாதனையாக காத்தான்குடி மீரா பாலிகாவின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு

(றிஸ்வான் சாலிஹு, முஹம்மட் சிப்னாஸ்)

2021ஆம் கல்வியாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதனடிப்படையில், காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை சார்பாக சுமார் 180 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியதுடன் 66 மாணவிகள் புலமைமைப் பரிசில் பெறுவதற்கான 147 எனும்  வெட்டுப்புள்ளியை தாண்டி திறமை சித்தியெய்தியதுடன்,  பரீட்சையில் மொத்தமாக 172 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்கள் என்று பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் யூ.எல்.மன்சூர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதனால் இப்பாடசாலையானது இன்று பெற்றோர்கள் நிமித்தம் விழாக்கோலம் பூண்டு, இப்பெறுபேறானது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இமாலய சாதனை எனக்கூறுவது மிகையாகாது எனலாம்.

இச் சாதனை வெற்றியினை கௌரவிப்பதற்காக நேற்று (14) திங்கட்கிழமை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.செய்யது உமர் மௌலானா அவர்கள் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு நேரடியாக சென்று அப்பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள் வலயத்தலைவர்கள், வெற்றிக்கு வழி வகுத்த ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையானது அதிபர் யூ.எல்.மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் இது போன்ற பல இமாலய வெற்றிகளை பெற வேண்டும் என்று பாடசாலை சமூகம் பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



வரலாற்று சாதனையாக காத்தான்குடி மீரா பாலிகாவின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வரலாற்று சாதனையாக காத்தான்குடி மீரா பாலிகாவின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு Reviewed by Editor on March 15, 2022 Rating: 5