எரிபொருளுக்கு வரிசையில் நின்ற இரண்டாவது நபர் மரணம்

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த போதே இந்த நபர் மயங்கி வீழ்ந்த நிலையில், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, நேற்றும் (19) கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற வயதான முதியவர் ஒருவர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.




எரிபொருளுக்கு வரிசையில் நின்ற இரண்டாவது நபர் மரணம் எரிபொருளுக்கு வரிசையில் நின்ற இரண்டாவது நபர் மரணம் Reviewed by Editor on March 20, 2022 Rating: 5