இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதற்கமைவாக கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான இலங்கையர்களை அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது . இதற்காக இலங்கை தூதுக்குழுவொன்று தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அண்மையில் கட்டாரின் சர்வதேச தொடர்புகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் அப்துல் அஸிஸ் அன்சாரியை சந்தித்து இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
(அரச தகவல் திணைக்களம்)