அந்-நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அந்-நூரியன்ஸ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(றியாஸ் ஆதம்)

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட அந்-நூரியன்ஸ் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2019ஆம் ஆண்டு பழைய மாணவர் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் நோக்கில் அப்பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட அந்-நூரியன்ஸ் சம்பியன் கிண்ணம் - 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (06) அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

அணிக்கு 7பேர் 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 2010ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு பழைய மாணவர் அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது 2019ஆம் ஆண்டு பழைய மாணவர் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இச்சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக என்.நபாத், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஏ.எல்.நியாஸ், சிறந்த பந்து வீச்சாளராக எஸ்.எல்.றிஸ்கான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்-நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எப்.ஹலிம் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.சீ.எம்.சுபையிர் பிரதம அதிதியாகவும், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம்.அஸ்மி கௌரவ அதிதியாகவும், கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன் மற்றும் பிரதி அதிபர் எம்.எச்.எம்.றமீஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இச்சுற்றுப் போட்டியின் போது முதலாம் மற்றும் இரண்டாமிடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசில்கள் என்பன இந்நிகழ்வின் போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.







அந்-நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அந்-நூரியன்ஸ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி அந்-நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அந்-நூரியன்ஸ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி Reviewed by Editor on March 08, 2022 Rating: 5