திருகோணமலைஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) செவ்வாய்க்கிழமை காலை றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரபொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை அன்பு வெளிபுறத்தை சேர்ந்த அருட்தந்தை நிதிதாசன் மற்றும் அவரது சாரதி ஆகியோர்கள் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் இருவர் மரணம்
Reviewed by Editor
on
March 01, 2022
Rating: