மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

இலங்கையில் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் இன்று (7) திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நடப்பட்டது.

புதிய சீமெந்து ஆலையின் மூலம் வருடத்திற்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் சீமெந்து சந்தைக்கு வெளியிட முடியும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சந்தையில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டைப் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் புதிய சிமெந்து தொழிற்சாலை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.








மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on March 07, 2022 Rating: 5