இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், மலையகத்தில் அமைக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசு பங்களிப்பின் அவசியத்தையும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
