(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில் கடந்த ஆண்டு தரம்-05 புலமைமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் முகமாக அம்மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை உள்ளடக்கிய கலை நிகழ்வு சனிக்கிழமை (26) கல்லூரியின் அதிபர் எஸ்.றினோஸ்டீன் அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தனது தலைமையுரையில்,
பரீட்சை எழுதிய தரம்- 5 மாணவர்கள் தங்களின் எதிர்கால மாற்றத்தை சிறந்த முறையில் மாற்றியமைக்கும் வகையிலும், மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தவும், இம்மாணவர்களின் மன அழுத்தத்தை மாற்றியமைக்கவும், தாங்கள் கவலையற்றவர்களாகவும், எவ்வாறு எதிர்காலத்தில் சமூகத்தில் தலைமை தாங்கும் திறனை வளர்த்து கொள்வதும், மற்றவர்களுக்கு மத்தியில் தங்களுடைய ஆளுமைகளை விருத்தி செய்வதற்குமான மிகப் பயனுள்ள நிகழ்வுகளை மாணவர் மன்றத்தில் இம்மாணவர்கள் செய்து காட்டினார்கள்.
பிரதம அதிதி உதவிக் கல்விப் பணிப்பாளர் அம்ஜத் கான் தனதுரையில்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் அரபு மொழிகளில் பாடல்களாகவும், பேச்சுக்களிலும், இஸ்லாமிய அன்றாட கடமைகள், நடனம் போன்ற அனைவரினதும் பாராட்டை பெற்ற நிகழ்வாக இது அமைந்திருந்ததோடு, இக்கல்லூரி சகல விதமான நடவடிக்கைகளிலும், குறிப்பாக கல்வி செயற்பாடு, இணைப்பாட விதான செயற்பாடுகள் போன்ற சகல துறைகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளதை குறிப்பிட முடியும்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்வுகளான,
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்ப பிரிவு) எஸ்.அம்ஜத்கான் அவர்களும், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களும், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசர்களான எஸ்.எல்.எம்.மன்சூர், ஜனாப் ஜுவைஸ் அவர்களும், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
