நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர்கள் மேம்பாட்டிற்கென பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு பூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் புதன்கிழமை (30) வழங்கி வைக்கப்பட்டது.
இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எஸ். சபறுல் ஹஸீனா அவர்களின் ஏற்பாட்டில் மாணவர்களின் நலன்கருதி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திடமிருந்து இவ் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
பிரதேச செயலக கணக்காளர் திருமதி. றிம்ஷியா அர்சாட் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட, இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான் உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர்.
