அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தம்பட்டை-02 கிராமத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு புதிய வீடு நேற்று (24) வியாழக்கிழமை பயனாளிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு திருக்கோவில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இவ்வீட்டுத் திட்டமானது சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச சமுர்த்தி பிரிவினால் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீட்டினை பயனாளியிடம் கையளித்து இருந்ததுடன் நிகழ்வில் சிரேஷ்ட சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.அரசரெத்தினம் கருத்திட்ட முகாமையாளர் பி.கமலேஸ்வரன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
Reviewed by Editor
on
March 25, 2022
Rating:

